- Author
- Per Lagerkvist - க.நா. சுப்பிரமணியம்
- Meeting date
- January 31, 2026
- Archive year
- 2026
- Rating
- 5/5
Pär Lagerkvist (1891–1974) ஸ்வீடிஷ் எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர். 1951-ஆம் ஆண்டுக்கான நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர். ஒரு நாடக ஆசிரியராக, லாகர்க்விஸ்ட் மிகவும் பல்துறை திறன் கொண்டவராக இருந்துள்ளார். லாகர்க்விஸ்ட், குறிப்பாக அவரது மூன்று முக்கியமான நாவல்களான, The Dwarf (1944), Barabbas (1950), மற்றும் Sibyllan (1956) ஆகியவற்றில், கடவுளுடனான மனிதனின் உறவின் சிக்கலை அதிகளவில் கையாண்டுள்ளார். "நம்பிக்கை இல்லாத ஒரு விசுவாசியின்" கதையான பராபாஸ், அவரது முதல் உண்மையான சர்வதேச வெற்றியாகும்.
மரண தண்டனை விதிக்கப்பட்டு சிலுவையில் அறைய அனுப்ப படும் பாரபாஸ் கடைசி நேரத்தில் விடுவிக்க படுகிறான். அவனுக்கு பதில் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை பின் தொடர்ந்து சென்று அவர் சிலுவையில் உயிர் நீக்கும் வரை அவரை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
கிறிஸ்துவை பற்றி எதுவுமே தெரியாத அவன், அவரை பற்றி பிறர் மூலமாக அறிகிறான். அவனுள் எழும் கேள்வி, சந்தேகம், அவ நம்பிக்கை, அனைத்துக்கும் மேலாக அவன் இயல்பாக பிறருடம் செலுத்தும் அன்பு, இவை பற்றிய உணர்வு பூர்வமான கதையை லாகர்க்விஸ்ட் நமக்கு சொல்லி இருக்கிறார்.
எளிதில் வெறுக்கப்படக்கூடிய ஒரு கதாபாத்திரம், பாரபாஸ். ஆனால் அவன் எவ்வாறு நமக்கு நெருக்கமானவானக உணரப்படுகிறான் என குழுவில் விவாதித்தோம். எனினும் இதை தொடர்ந்து பாரபாஸ் பற்றியும், அக்காலகட்டத்தில் இறையென கருதப்பட்டவை பற்றியும் மேற்கொண்டு வாசிக்க தூண்டுதலாய் இருந்தது.