கலந்துரையாடல்கள்
நாங்கள் வாசித்து விவாதித்த தமிழ் மற்றும் உலக இலக்கியங்களின் தொகுப்பு. ஒவ்வொரு நூலுக்கான கலந்துரையாடல் கேள்விகள், வாசகர் அனுபவங்கள் மற்றும் முக்கிய விவாதப் புள்ளிகள் இங்கே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை வாசித்தவை
கடந்த ஆண்டுகளில் நாங்கள் வாசித்து விவாதித்த புத்தகங்கள்.

பணம்சார் உளவியல்
பணம்சார் உளவியல்
Morgan Housel (ஆசிரியர்), சந்தர் சுப்பிரமணியன் (தமிழில்)
”பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலின், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.

பள்ளம்
பள்ளம்
சுந்தர ராமசாமி
சு.ரா.வின் ஆறு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். 1985ஆம் ஆண்டில் வெளிவந்த தொகுப்பின் மறு பிரசுரம். ‘ஆத்மாராம் சோயித்ராம்’, ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ போன்ற சு.ரா.வின் மிகச்சிறந்த கதைகளாகப் பேசப்பட்ட கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.
விமர்சனக்கலை
விமர்சனக்கலை
க.நா.சுப்ரமண்யம்
இந்தியாவிலும் உலக அரங்கிலும் புதுத் தமிழ் இலக்கியத்தின் மேன்மையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எழுத்தாளராகவே இருந்துவரும் க. நா. சுப்ரமண்யம் தமிழ் நாவல், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, இலக்கிய பத்திரிகை வெளியீடு ஆகிய துறைகளில் மைல் கல்கள் பதித்திருக்கிறார். தற்காலத் தமிழ் எழுத்தில் அதனைப் புரிந்திருக்கும் அனைத்து எழுத்தாளர்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ க. நா. சு. வின் விமரிசனக் கண்ணோட்டத்திற்கும் முன்மாதிரிகளுக்கும் கடமைப்பட்டிருக்கிறார்கள். எழுபத்தி மூன்றாவது வயதிலும் அயராது உழைக்க வேண்டியுள்ள இவரது 'விமரிசனக் கலை' ஒவ்வொரு தமிழ் வாசகரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல்...

அலங்காரப்ரியர்கள்
june-2026-alangara-piriyarkal
சு. வெங்கடேசன்
காலமும் மண்ணுக்குள்தான் புதைந்திருக்கிறது. புதையுண்ட மண் ஓடுகளில் பதிந்திருக்கும் சித்திரங்கள் சொல்ல நினைப்பவைகள் என்னவோ? அளவீட்டுக்கருவிகளை வைத்து காலத்தை அறிந்து கொள்ளலாம், கலையை அறிந்து கொள்ளமுடியுமா? கலையை அறிதலும் காலத்தை அறிதலும் ஒற்றைப் புள்ளியில் முடிச்சிட்டுக் கிடக்கிறது. அதுதான் இயற்கை.

அடிமாடுகள் மற்றும் வளர்த்த கடா
may-2026-admaadugal
சிவசங்கரி
சிவசங்கரி தமிழில் பொது வாசிப்புக்கான சமூக நாவல்களை எழுதிய எழுத்தாளர். இவர் மத்திய தர மக்களின் வாழ்க்கையை கதைக்களனாகக் கொண்டு பல சிறுகதைகள், நாவல்கள், குறு நாவல்கள் எழுதியிருக்கிறார். பெண்களின் உரிமைகள் மற்றும் பாலியல் சுதந்திரம் ஆகியவற்றைக் கருக்களாகக் கொண்டு எழுதியவர். குடி முதலிய சமூகத்தீங்குகளை எதிர்த்தும் எழுதியிருக்கிறார். இந்திய இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்க்கும் இலக்கிய முயற்சியான 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' தமிழுக்கு இவருடைய கொடை.

சங்கச் சித்திரங்கள்
april-2026-sanga-sithirangal
ஜெயமோகன்
நாம் சங்க இலக்கியத்தை பள்ளிப்பாடமாக மனப்பாடம் செய்கிறோம். கோயில் சிலைகளைப் போல இருட்டில் வைத்து வழிபடுகிறோம். அல்லது ஏதோ தொல்பொருள் போல சுரண்டிச் சுரண்டி ஆய்வு செய்கிறோம். கவிதை அடிப்படையில் வாழ்வுடன் தொடர்புள்ளது. வாழ்வை விரிவுபடுத்துவது. வாழ்வை வைத்துத் தான் கவிதையை வாசிக்க வேண்டும்.

பகலில் ஒரு வேஷம்
march-2026-pagalil-oru-vesham
த. ஜெயகாந்தன்
An evening devoted to discussing the bliss of reading Jeyakanthan and classical sangam literature.

வாழ்விழந்து வரும் கிராமிய இசைக்கருவிகள்
2026-02-musical-instruments
வெ.நீலகண்டன்
Optional short intro for archive cards and page metadata.

அன்பு வழி
2026-01-anbu-vazhi
Per Lagerkvist - க.நா. சுப்பிரமணியம்
Pär Lagerkvist (1891–1974) ஸ்வீடிஷ் எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர். 1951-ஆம் ஆண்டுக்கான நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர். ஒரு நாடக ஆசிரியராக, லாகர்க்விஸ்ட் மிகவும் பல்துறை திறன் கொண்டவராக இருந்துள்ளார். லாகர்க்விஸ்ட், குறிப்பாக அவரது மூன்று முக்கியமான நாவல்களான, The Dwarf (1944), Barabbas (1950), மற்றும் Sibyllan (1956) ஆகியவற்றில், கடவுளுடனான மனிதனின் உறவின் சிக்கலை அதிகளவில் கையாண்டுள்ளார். "நம்பிக்கை இல்லாத ஒரு விசுவாசியின்" கதையான பராபாஸ், அவரது முதல் உண்மையான சர்வதேச வெற்றியாகும்.